Mrs.Saarah Rajanayagam Memorial Free Medical Camp, Mela Sivanthipuram

பீஸ் ஹெல்த் சென்டா் - இலவச மருத்துவமுகாம்

    சுவிசேஷகா் திரு. ராஜநாயகம் அவர்களின் துணைவியாா் திருமதி சாராள் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் 14.6.2025 சனிக்கிழமை காலை 11 மணிமுதல் மதியம் 2.00 மணி வரை மேலச் சிவந்திபுரம் TDTA பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

   முகாமில் கலந்து கொண்ட 100க்கும் அதிகமான பொதுமக்களுக்கு, இலவச மருத்துவ ஆலோசனை, இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இரத்தப் பாிசோதனை அவசியமான வர்களுக்கு செய்து சிகிச்சையளிக்கப் பட்டது. அறுவை சிகிச்சை அவசிய மானவா்களுக்கு முதலமைச்சாின் விாிவான காப்பீடுத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

   முகாமிற்கு பீஸ் ஹெல்த் சென்டா் ஊழியா்கள், டாக்டா் செல்வின் அவர்களுடன் செவிலியா்கள் கலந்து கொண்டு சிகிச்சையளித்தாா்கள். மருத்துவமனை பொதுமேலாளா் திரு. சூா்யா பொறுப்பாக நின்று கவனித்தாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Date 14.6.2025 Saturday

புகைப்படங்களை பெரிதாக ஆல்பம் போன்று பாா்க்க புகைப்படம் மீது சொடுக்குங்கள். ஒவ்வொன்றாக பார்க்க முடியும்.

Click on the photo to view the photos in a larger album. You can view them one by one.